Thursday, January 31, 2008

சென்னையில் எச்சில் துப்பினால் அபராதம்!- சாத்தியப்படுமா?

இனிமேல் சென்னைக்காரர்கள் குப்பை கொட்டுவதில் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லை யேல் தண்டத் தொகை கட்ட வேண்டும்.

இது தெடார்பான தீர்மானம் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சென்னையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றைப் பொது இடங்களில் செய்யக்கூடாது. செய்தால் 50 ரூபாய் தண்டம். குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று பிரித்து அதற்குரிய இடத்தில் கொட்ட வேண்டும். அப்படிச்செய்யா விட்டால் 500 ரூபாய் தண்டம்.

தங்களது வீட்டின் வெளிப் பகுதியை சுத்தமாக வைக்காத வீட்டின் உரிமையாளர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



பான்பராக் போன்ற வஸ்துகளை மென்று சாலைகளை 'ரத்தக் களறியாக்கி' (ரத்தக் கலராக்கி) வைப்போருக்கு இந்த தண்டனை மிக மிக அவசியமான ஒன்று தான். சவுக்கார்பேட்டையிலிருந்து கண்டிப்பாக எதிர்ப்பு கிளம்பும்.

ஆனால், பொதுக் கழிப்பிடங்களை முதலில் மாநகராட்சி சுத்தமாக வைத்தால் தான் சிறுநீர் கழிக்க மக்கள் உள்ளே போவார்கள். கழிப்பிடத்தின் வெளிப்பகுதி உள் பகுதியை விட 'சுத்தமாக' இருந்தால் மக்கள் எப்படி உள்ளே காலடி வைப்பார்கள் என்பதை மாநகராட்சி யோசிக்க வேண்டும்.

பெருமளவில் குப்பைகளைக் கொட்டும் நிறுவனங்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் குப்பைகளைக் கொட்ட வேண்டும். தவறினால் 500 ரூபாய் தண்டம். குப்பைகளை எரித்தாலும் 500 ரூபாய் தண்டம் விதிக்கப்படும்.

அனைவறும் முன்வந்து ஒத்துழைப்பு தருவார்களா? அல்லது 'அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்' என்பார்கள? இந்த சட்டம், தீர்மானம் எந்த அளவுக்கு சாத்தியப்படும், பொறுத்திறுந்து பார்போம்!.

No comments: