Wednesday, November 7, 2007

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்த எகிப்து மன்னரின் உடல்!





3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த எகிப்து நாட்டு மன்னரின் பதப்படுத்தப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

எகிப்து நாடு பிரமிடுகளுக்கு புகழ்பெற்றது. இறந்த மன்னர் களின் உடல்களை பதப்படுத்தி இந்த பிரமிடுகளின் அடியில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள். இப்படி பதப்படுத்திய உடல்கள் பல நூறு ஆண்டு களுக்கு மேலாக கெடாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

எகிப்து நாட்டின் புகழ் பெற்ற பாரோ மன்னர் டுட் (King Tut) 19 வயதில் மரணம் அடைந்தார். அவரின் வாழ்க்கையும் மரண மும் எகிப்து நாட்டு மக்களால் 100 ஆண்டு காலத்துக்கு பேசப்பட்டது.

அவர் 3 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு இறந்து போனார். அவர் உடல் அவரது கல்லறையில் இருந்து 85 ஆண் டுகளுக்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்டது.

கெய்ரோவில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள லக்கர் பகுதியில் அது புதைக்கப்பட்டு இருந்தது. இதை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்தனர்.

பதப்படுத்தப்பட்ட அவரது முகத்தில் தங்க கவசம் மற்றும் சில மூலிகைப் பொருள்களால் சுற்றப்பட்டு இருந்தது. அதை தனியாக பிரித்து எடுக்கும் போது பதப்படுத்தப்பட்ட உடலுக்கு சில இடங்களில் சேதம் ஏற்பட்டது.

கல்லறையில் தோண்டி எடுத்தபோது பதப்படுத்தப்பட்ட உடல் 18 ஆண்டுகளில் உடைந்தது. அவற்றை விஞ்ஞானிகள் ஒன்று சேர்த்தனர். பிறகு அது சி.டி.ஸ்கேன் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இது பொதுமக்கள் பார் வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தரைக்கு அடியில் அமைக் கப்பட்ட அறையில் இது பாது காப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகிறார்கள்.

இது பிறகு லண்டனில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. பிறகு அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் மியூசியத்திலும் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

8 கை, கால்களுடன் பிறந்த குழந்தைக்கு வாழ்வு தந்த டாக்டர்கள்!


பீகாரில் அராரியா எனும் இடத்தைச் சேர்ந்த இரண்டு வயது லட்சுமி, முழுமை அடையாத மற்றொரு உடலுடன் ஒட்டிப் பிறந்த ஒரு பெண் குழந்தை ஆவார். அவ்வாறு பயனின்றி ஒட்டியுள்ள உடம்பின் மிகை உறுப்புகளை நீக்குவதற்கு, 40 மணி நேர அறுவை சிகிச்சையை, பெங்களூரின் புறப்பகுதியில் உள்ள நாராயண சுகாதார மாநகரில் உள்ள ஸ்பார்ஷ் மருத்துவமனையில் குழு சிகிச்சை தொடங்கினர்.

இது ஒரு மிகச் சிக்கலான, அதி நுட்பத் திறன் தேவைப்படும் அறுவை எனக்கூறப்படுகிறது. இரண்டு உடல்கள் ஒட்டியிருந்தாலும், ஒன்றுக்குத்தான் தலை இருக்கிறது. ஆனால், நான்கு கைகள், நான்கு கால்கள் இருக்கின்றன. இந்தக் குழந்தை இந்த எட்டு உறுப்புகளையும் இயக்குகிறது.

மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஷரன்படீல் தலைமையில், குழந்தை மருத்துவர்கள், நரம்பியல், பிளாஸ்டிக், நுண்ணிய நாளங்கள் ஆகியவற்றில் அறுவை சிகிச்சை செய்யும் வல்லுநர் குழு சிகிச்சையில் ஈடுபட்டிருக்கிறது.

நேபாள எல்லைக்கு அருகில் உள்ள, பிகாரைச் சேர்ந்த ஒரு கிராமத்தின் ஏழைக் குடும்பக் குழந்தைக்கு இந்தச் சிக்கலான மருத்துவத்தைச் செய்ய அதை ஒர் அறை கூவலாக ஏற்று, மருத்துவமனை முன் வந்துள்ளது. இத்தகைய சிகிச்சை இந்தியத் துணைக் கண்டத்தில் இதுவே முதல் முறையாகும். இதற்கு ரூ.25 லட்சம் ரூபாய் செலவாகும். இதை இலவசமாக மருத்துவமனை செய்துள்ளது.

கால்களும், தண்டுவடமும் இணையும் எலும்பில் இரு உடம்புகள் ஒட்டியுள்ளன. 50 ஆயிரம் பிறப்புகளில் ஒன்றுக்கு இக்குறை ஏற்படலாம். கல்லீரல், குடல், சிறுநீர்ப் பாதை, பிறப்பு உறுப்புகள், நாளங்கள், எலும்பு தசை ஒட்டிய பகுதிகள் ஆகிய உடற் கூறுகள் தொடர்பாக இந்தச் கிகிச்சை செய்யப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு முன்பு மருத்துவமனைக்கு வந்த குழந்தை லட்சுமி, சரியான உணவின்றி, நலிந்தும், ரத்த சோகையுடனும் இருந்ததால், அக்குறைகளைப் போக்கி, சிகிச்சை வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது

தற்போது லட்சுமி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அங்கு சில நாட்கள் டாக்டர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணிப்பார்கள்.

இனி லட்சுமி வழக்கமான பெண் குழந்தையைப் போல அனைத்து நலமுடனும் வாழ வழி பிறந்துள்ளது என்றார்.

தங்களது மகளுக்குப் புது வாழ்வு கொடுத்துள்ள டாக்டர்களுக்கு லட்சுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி கூறினர். தங்களது மகளுக்குப் புது வாழ்க்கை கொடுத்த டாக்டர்களுக்கும், கடவுளுக்கும் நன்றி சொல்வதாக லட்சுமியின் தந்தை சாம்பு கூறினார்.

லட்சுமி விரைவில் முழு குணமடைய நாமும் பிரார்த்திப்போம்.

Friday, October 12, 2007

SMS மூலம் ரயில் பயணச்சீட்டு

SMS மூலம் ரயில் பயணச்சீட்டு ரயில்வே அமைச்சகம் திட்டம்

ரயில் பயணச் சீட்டை SMS மூலம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்ச கம் பரிசீலித்து வருகிறது.
முன்பதிவு செய்யப்படாத பயணச் சீட்டுகளை வாங்க ரயில் நிலையங்களில் பயணி கள் நீண்ட வரிசையில் நிற்க நேர்கிறது. இதைத் தவிர்க்கும் வகையில் எஸ்.எம்.எஸ். மூலம் பயணச் சீட்டு பெறும் வசதியை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் முன் பதிவு செய்யப்படாத பயணச் சிட்டை வாங்க செல்பேசியில் இருந்து ரயில்வே துறைக்கு ஒரு SMS அனுப்ப வேண்டும். அதில் நாம் புறப்படும் ஊர், செல்ல வேண்டிய ஊர், எத்தனை பயணச்சீட்டு வேண்டும்? மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் இடம் பெற வேண்டும்.

சிறிது நேரத்தில் ரயில்வே துறை இ-டிக்கெட் ஒன்றை SMS மூலம் அனுப்பும். அதில், புறப்படும் ஊர், செல் லும் ஊர், பயணிகள் எண் ணிக்கை ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
இந்த SMS தான் பயணச்சீட்டு. ரயில்வே பயணச் சீட்டு பரிசோதகர் கேட்கும் போது செல்பேசியில் உள்ள SMS சை அவரிடம் காட்டினால் போதும்.

என் வழி தனி வழி

போலீஸ் ஸ்டோரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் தன்னுடைய சாகசம் மற்றும் நகைச்சுவை கலந்த நடிப்பின் மூலம் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் மனங்கவர்ந்தவர் ஜாக்கிசான். ஆசிய சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் இவரது மகன் ஜாய்சிசான் இப்போது நடிக்க வந்திருக்கிறார் நடிப்புத்துறையில் தனக்கென தனி பாதையை வகுத்துக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார் ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானின் மகன் ஜாய்சிசான்.

ஜாய்சிசான் நடித்துள்ள தி சன் ஆல்சோ ரைசஸ் எனும் திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. தந்தையை போல அதிரடி படங்களில் நடிக்காமல் அவர் கலைப்படம் ஒன்றில் நடித்திருக்கிறார். ஜாக்கிசானின் மகன் என்ற முறையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஜாய்சி திரைப்பட உலகில் தனக்கென தனிப்பாதை வகுத்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

5000 ரூபாயில் கம்ப்யூட்டர்!

ஐந்து ஆயிரம் ரூபாய்க்கு அதிலும், இன்டெர்நெட் வசதியோடு கூடிய கம்ப்யூட்டரை "நொவாட்டியம்' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கையை கடிக்காத விலையில் கம்ப்யூட்டரை வாங்கி பயன்படுத்த வேண்டும் எனும் நடுத்தர மக்களின் கனவை நினைவாக்கும் வகையில் சென்னையைச் சேர்ந்த நொவாட்டியம் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

கம்ப்யூட்டர் என்பது வசதி படைத்தவர் மட்டுமே பயன்படுத்தலாம் என்னும் நிலைமாறி, கடந்த சில ஆண்டுகளில் அவற்றின் விலை பெருமளவு சரிந்திருக்கிறது என்ற போதிலும், ஓரளவுக்கு நினைவு திறன், சமீபத்திய சாப்ட்வேர், அதற்கு ஈடுகொடுக்கக் கூடிய ஹார்டுவேர்டு வசதி ஆகியவற்றை கொண்ட நன்றாக செயல்படக் கூடிய கம்ப்யூட்டரின் விலை சராசரியாக 30 ஆயிரம் ரூபாய்க்கு வந்து விடுகிறது.குறைந்த வருமானம் கொண்ட நடுத்தர மக்களுக்கு இது பெரிய தொகையாகவே இருக்கிறது. கீழ் நடுத்தர மக்களை பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் எல்லா தரப்பினருக்குமான கம்ப்யூட்டர் தேவை என்பது ஒன்றாகவே இருக்கிறது.அதிலும் உலகம் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் அடியெடுத்து வைத்து நவீன பாதையில் பயணித்து வரும் நிலையில், எல்லா விஷயங் களுக்கும் கம்ப்யூட்டர் தேவைப்படுகிறது.

இந்நிலையில் சாதாரண மக்களுக்கும் கம்ப்யூட்டரை வாங்கி பயன்படுத்தக் கூடிய வகையில் சென்னையைச் சேர்ந்த நொவாட்டியம் நிறுவனம் ரூபாய் 5 ஆயிரம் விலைக்கு (ரூ.4999) தன்னுடைய கம்ப்யூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. குறைந்த விலைக்கு கம்ப்யூட்டரை விற்பதாக பல நிறுவனங்கள் கூறிவருகின்றன என்றாலும் 5 ஆயிரம் ரூபாய்க்கு கம்ப்யூட்டர் சாத்தியமா என்ற கேள்வி எழலாம். இது உண்மைதானா என்ற நம்ப முடியாத உணர்வும் ஏற்படலாம்.இது உண்மைதான். சாதாரண கம்ப்யூட்டர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதால் இதனை குறைந்த விலைக்கு விற்க முடிகிறது. வேறுபட்ட கம்ப்யூட்டர் என்றாலும், சாதாரண கம்ப்யூட்டரில் செய்யக் கூடிய அனைத்து பணிகளையும் இந்த கம்ப்யூட்டர் மூலம் நிறைவேற்றி கொள்ளலாம்.பொதுவாக தற்போது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் என்று குறிப்பிடப்படுகின்றன. மானிட்டர், விசைப்பலகை ஆகிய பிரிக்க முடியாத அங்கங்களோடு வரும் இந்த கம்ப்யூட்டரின் உயிர்நாடி சிபியூ என்று சொல்லப்படும் மைய சாதனத்தில் இருக்கிறது. நினைவு திறன், செயல்பாட்டு திறன், சாப்ட்வேர் ஆகிய எல்லாவற்றையும் இந்த பகுதியே தாங்கி நிற்கிறது.ஒரு கம்ப்யூட்டரை உருவாக்க பெரும் செலவு இந்த சாதனத்தை நோக்கியே செல்கிறது. ஒரு கம்ப்யூட்டரின் செயல் திறனை அதிகரிக்க வேண்டும் என்றால், இதன் செலவும் அதிகரிக்கும். டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு மாற்றாக மற்றொரு கம்ப்யூட்டர் கருத்தாக்கம் முன்வைக்கப்படுகிறது.நெட்வெர்க் டிசி என்று அதன் பெயர். நினைவுத்திறனுக்கு சிபியூவை சார்ந்திருக்காமல், மையசர்வர் ஒன்றின் மூலம் தனக்குத் தேவையான ஆற்றலை பெற்று செயல்படக் கூடிய கம்ப்யூட்டர்கள் நெட்வெர்க் பிசி ரகமாக கருதப்படுகிறது. அதாவது சர்வசக்தி படைத்த ஒரு மைய சர்வரின் ஆற்றலை எண்ணற்ற கம்ப்யூட்டர்கள் பகிர்ந்து கொள்வது நெட்வெர்க் பிசி மூலம் சாத்தியமாகிறது. இந்த நெட்வெர்க் பிசி கருத்தாக்கத்தின் அடிப்படையில், நொவாட்டியம் நிறுவனம் தன்னுடைய நொவாட் நெட்பிசி கம்ப்யூட்டரை அறிமுகம் செய்திருக்கிறது.எல்லா கம்ப்யூட்டர்களிலும் இருப்பது போல இதில் மானிட்டர் மற்றும் விசைப்பலகை உண்டு. ஆனால் சிபியூ கிடையாது. அதற்கு பதிலாக மைய சர்வருடன் தொடர்பு கொள்ளக் கூடிய செட்டாப் பாக்ஸ் போன்ற ஒரு பாக்ஸ் மட்டும் உண்டு. இந்த பாக்ஸ் மூலம் மைய சர்வரின் ஆற்றலை பெற்று கம்ப்யூட்டர் இயங்கும். இதன் காரணமாக இந்த கம்ப்யூட்டரின் தயாரிப்பு செலவை கணிசமாக குறைந்து விடுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த கம்ப்யூட்டருக்கு தனியே சாப்ட்வேர் எதுவும் தேவையில்லை. எல்லாமே மையசர்வரின் வசம் உள்ளது. எனவே புதிய தேவைக்காக சாப்ட்வேரை அப்டேட் செய்து கொள்ள வேண்டிய அவசியமும் கிடையாது. அதோடு சாப்ட்வேர் மூலம் பரவக்கூடிய வைரஸ்பாதிப்புகள் பற்றிய கவலையும் தேவையில்லை. மேலும் மின் சக்தி பயன்பாடும் குறைவாகவே இருக்கும். இதெல்லாம் நொவா நெட்பிசியின் சாதகமான அம்சங்கள்.மற்றபடி சாதாரண கம்ப்யூட்டரை பயன்படுத்துவது போலவே இதனை பயன்படுத்தலாம்.

இமெயில் அனுப்புவது, இன்டெர்நெட்டில் உலாவி தகவல்களை பெறுவது உள்ளிட்ட அனைத்து விஷயங் களையும் இதன் மூலம் நிறைவேற்றி கொள்ளலாம். இந்த நெட்வேர்க் பிசி மையசர்வரோடு கேபிள் மூலம் இணைக்கப்படுகிறது. இன்டெர்நெட் இணைப்பும் இந்த கேபிள் மூலமே கிடைத்து விடும், எனவே தனியே இன்டெர்நெட் வசதி தேவையில்லை. ஆனால் மாதாந்திர கட்டணமாக ரூ. 499 செலுத்த வேண்டும். மையசர்வரின் சேவையை பயன்படுத்துவது மற்றும் இன்டெர்நெட் வசதி உள்ளிட்ட அனைத்துக்குமான தொகை இது.

சென்னை ஐஐடியில் படித்த அசோக் ஜூன்ஜூன்வாலா, ராஜேஷ் ஜெயின் உள்ளிட்ட தன்னுடைய நண்பர்களோடு இணைந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிறுவனத்தை நிறுவினார். இந்தியாவில் உள்ள சாமான்ய மனிதர்கள் பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டரை உற்பத்தி செய்ய வேண்டும் என்னும் நோக்கில், இந்த நிறுவனத்தை அவர் துவக்கினார். தொழில்நுட்ப மாநாடு ஒன்றில் பங்கேற்ற போது, கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சிகளி லிருந்து விலகியிருக்கும் பெரும் பாலானவர்களிடம் கம்ப்யூட்டரை கொண்டு சேர்க்க வேண்டும் என்னும் உந்துதல் அவருக்கு ஏற்பட்டது. அதன் விளைவாக பிறந்ததே நொவாட்டியம் நிறுவனம். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 5 கோடி கம்ப்யூட்டர்களை விற்று, கம்ப்யூட்டர் புரட்சி செய்ய வேண்டும் என இந்நிறுவனம் விரும்புகிறது. இதன் முதல் கட்டமாக சென்னையில் கே.கே.நகர் பகுதியில் நொவாநெட்பிசி, 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு விற்கப்பட்டு, கேபிள் மூலம் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இதற்கு சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர். இந்த கம்ப்யூட்டர் நம்ப முடியாத விலையில் கிடைப்பது குறித்து அவர்கள் வியப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பலருக்கு முதல் முறையாக கம்ப்யூட்டரை பயன்படுத்தும் அனுபவத்தை இது ஏற்படுத்தி தந்திருக்கிறது. அடுத்ததாக அரசு பள்ளிகள் மற்றும் பிற நகரங்களில் இந்த கம்ப்யூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னையைப் போலவே டெல்லியில் இந்த கம்ப்யூட்டர் சந்தைப்படுத்தப்பட உள்ளது. தற்போது கேபிள் மூலம் வழங்கி வரும் இணைப்பை எதிர்காலத்தில் தொலைபேசி மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தின் தயாரிப்பு சர்வதேச இதழ்கள் உள்ளிட்ட பல பத்திரிகைகளின் பாராட்டை பெற்றுள்ளது. சென்னையில் இந்த கம்ப்யூட்டரை மக்கள் மத்தியில் அறிமுகமாக்கி பிரபலமாக்கும் பொறுப்பை இதன் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் ராஜேஷ்வரி ஏற்று கொண்டுள்ளார்.

நோவாநெட்பிசியை எளிமையான கம்ப்யூட்டர் என்று சொல்ல வேண்டும். இந்த கம்ப்யூட்டரின் சாப்ட்வேர் தேவைக் காக மைக்ரோ சாப்ட் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. எனவே மைக்ரோசாப்ட்டின் பிரபல மான சாப்ட்வேர்களை இதில் பயன் படுத்தலாம். அதோடு கல்விக்கான மைக்ரோசாப்ட்டின் பிரத்யேக சாப்ட்வேரையும் நோவாநெட்பிசி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும். இதோடு இன்டெர்நெட் மூலம் டவுன்லோடு செய்துகொள்ளும் வசதியும் இதில் உண்டு. ஆனால் இதில் சிடி டிரைவ் கிடையாது. எனவே இதில் சிடியை போட்டு படம் பார்ப்பது சாத்தியமில்லை. எளிமையான செயல்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்பதால், திட்டமிட்டு சிடி வசதி தவிர்க்கப் பட்டுள்ளது. அதோடு கல்வி தேவைக்காக கம்ப்யூட்டர் வாங்குபவர்களுக்கு இந்த குறை ஒரு சாதகமான அம்சமாகவே தெரியும்.