நாடாளுமன்ற தேர்தலுக்காக செலவிடப்படும் தொகையான ரூ.10 ஆயிரம் கோடி, அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக செலவிடப்பட்ட தொகையை விட அதிகமானதாக இருக்கும் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் செய்த செலவுகள் இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி தற்போது நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான செலவு ரூ.10 ஆயிரம் கோடி. இதில் ரூ.2,500 கோடி வாக்களிக்கும் மக்களுக்கு அளிப்பதற்காக செலவிடப்படுகிறதாம்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக தற்போது செலவிடப்பட உள்ள தொகையும் கடந்த தேர்தலை விட இரண்டு மடங்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் செலவிடப்பட்ட ரூ.4500 கோடியே வரலாற்றிலேயே அதிகமானதாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment